முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளுக்கு அருண்ஜெட்லி பாராட்டு

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை - நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளை மேம்படுத்துவதில் மத்திய ரிசர்வ் வங்கி தொழில் நேர்த்தியுடன் பணியாற்றியுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி  தெரிவித்தார். மும்பையில் மத்திய ரிசர்வ் வங்கியின் 80ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண்ஜெட்லி பேசியதாவது,

1935ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நாட்டின் பலதரப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளை ஆர்.பி.ஐ. தன் தோள்களில் சும்ந்து வந்துள்ளது. நாட்டின் நிதிக்கொள்கையை நிர்வகிப்பது முதல், பணவீக்கம், ரூபாய் மதிப்பு, வங்கித்துறை ஒழுங்குமுறையாக்கம், பொதுக்கடன் மேலாண்மை என்று தொழில் நேர்த்தியுடன் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டுக்காக சேவையாற்றியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் இந்தத் தொழில் நேர்த்தி நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய சேவையாற்றியுள்ளது. ஆர்.பி.ஐ. செயல்பாடுகள் குறித்து நாம் உண்மையில் பெருமையடைகிறோம். நாம் முதலீடுகளுக்காக கதவுகளை திறந்து விட்டுள்ளோம். வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் சரளமாக பயன்பட இந்தியப் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையை மீட்டுள்ளோம்.

பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டம் அபாரமாக வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த வங்கிகளின் செயல்பாடுகளும் பாராட்டுதலுக்குரியது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து