முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மெட்ரோ ரயில் துவக்கம்: விரைவில் தேதி அறிவிப்பு

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க விழா தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அதன் உயரதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இரு வழித் தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையத்திற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரைக்கும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையிலான 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சோதனை ஓட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பாதுகாப்பு தொடர்பான முதற்கட்ட ஆய்வுப் பணி நேற்று தொடங்கியுள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரி உட்பட 3 பேர் கொண்ட குழுவினர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். மொத்தம் 2 கட்டங்களாக இப்பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், இதுதொடர்பான அறிக்கை ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா தேதி, கட்டண நிர்ணயம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து