முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை விஷு: சபரிமலை கோவில் நடை 10ம் தேதி திறப்பு

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பஜையின்போது ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்.இது தவிர சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை விஜு பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு சித்திரை விஷுவை யொட்டி வருகிற 10ம் தேதி நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமி அய்யப்பனுக்கு தீபாரதனை மட்டும் காட்டப்படும். வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது.

மறுநாள் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை சுவாமி அய்யப்பனுக்கு சகஸ்ரலச பூஜை, சரசாபிஷேகம், உதயஸ்தமன பூஜை மற்றும் நெய் அபிஷேகம் நடைபெறும். அதிக பொருட் செலவில் நடைபெறும் படி பூஜையும் நடத்தப்படும். சித்திரை விஷுவான வருகிற 15ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 7 வமணி வரை விஷு கனிகாணுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுவாமி அய்யப்பன் சிலை முன்பு பழங்கள், காய்கறிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் வைக்கப்படிருக்கும். இவற்றை பக்தர்கள் தரிசித்து சுவாமி அய்யப்பனை வணங்கி செல்வார்கள்.

இதில்  பங்கேற்கும் பக்தர்களுக்கு தந்திர மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்கலை கை நீட்டமாக வழங்குவார்கள், தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். பின்னர் 19ம் தேதி இரவு 10 மணியளவில் அரிவராசணம் பாடல் பாடப்பட்டு அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படும். சித்திரை விஷு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் தேவசம்போர்டு சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது. பம்பை, சன்னிதானம் நீலிமலை, நிலக்கல் ஆகிய இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் 10ம் தேதி முதல் செயல்பட நவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை கேரள அரசு போக்குவரத்துக் கழக சார்பில் திருவனந்தபுரம் கோட்டயம், எர்ணாக்குளம், குருவாயூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சபரி மலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து