முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 21-ல் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை நடைபெறும் விழாகக்ளில் மிக முக்கியமான விழாவாக கருதப்படுவது சித்திரை திருவிழாவாகும். இவ்விழாவை காண பல்வேறு மாவட்டங்களில்  இருந்தும் வெளிநாட்டவர்களும் வருவது உண்டு. இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இவ்விழா குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 21ம் தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் 27ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சுவாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் 28ம் தேதி இரவு 7.36 மணியளவில் பட்டாபிஷேகம் நடக்கிறது. மறுநாள் 29ம் தேதி திக் விஜயம், 30ம் தேதி காலை 9 மணி முதல் 9.30 மணி வரைக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மே 1ம் தேதி காலை 5.30 மணியளவில் தேரோட்டமும், 2ம் தேதி தீர்த்தவாரி, தேவேந்திர பூஜை, அம்மன் - சுவாமி திருவீதி உலா நடக்கிறது. அன்றுடன் விழா நிறைவடைகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து