முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் இன்று மோதல்

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை - ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகல் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையிலான 7 தொடர்களில் மிகவும் சீரான முறையில் ஆடி வெற்றிகளைக் குவித்து வரும் அணி டோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ். மாறாக டெல்லி டேர் டெவில்ஸ் அணி முற்றிலும் புதிய கேப்டனான ஜே.பி.டுமினியின் தலைமையின் கீழ் ஒரு புதிய அணியை களமிறக்குகிறது.

இதற்கு முந்தைய 7 ஐபிஎல் தொடர்களிலும் இறுதி 4 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். 4 இறுதிப் போட்டிகளில் விளையாடி 2 முறை சாம்பியன் பட்டமும் டோனியின் தலைமையின் கீழ் வென்றுள்ளது சென்னை.சென்னை அணிக்கு மீண்டும் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி திரும்பியுள்ளார். இர்பான் பதான் வந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் மற்றும் லெக் ஸ்பின்னர் ராகுல் சர்மா ஆகியோரும் உள்ளனர்.

நடுவரிசையில், எப்போதும் ஃபார்மில் இருக்கும் சுரேஷ் ரெய்னா, ஹஸ்ஸி, தோனி, டிவைன் பிராவோ, ஆகியோர் இருக்க ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, மற்றும் அஸ்வின் உள்ளனர். பந்துவீச்சில் கைல் அபாட் தவிர மணிக்கு 150 கிமீ வேகத்தில் சீராக வீசும் நியூஸிலாந்தின் மேட் ஹென்றி இருக்கிறார். உலகக் கோப்பை ஃபார்மைத் தொடரும் முனைப்புடன் மோஹித் சர்மா இருக்கிறார்.

டெல்லி அணியில் யுவராஜ் சிங் எனும் திமிங்கிலம் உள்ளது. எப்படியாவது மீண்டும் அணியில் இடம்பெறத் துடித்துக் கொண்டிருக்கும் இவர் விக்கெட் கீப்பர் நிலையில் இருக்கும் தோனியை கவரும் விதமாக, அல்லது அசத்தும் விதமாக நிச்சயம் ஒரு அனாயாச மட்டை சுழற்றல் இன்னிங்ஸை காண்பிப்பார் என்று ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. டெல்லி அணியில் யுவராஜ், ஜே.பி.டுமினி, மயங்க் அகர்வால், குவிண்டன் டி காக், கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி ஆகியோர் இருக்கின்றனர். மேத்யூஸ் இலங்கை வீரர் என்பதால் சென்னையில் நடைபெறும் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை.

பந்துவீச்சில் ஜாகீர் கான், மொகமது ஷமி, நேதன் கூல்டர் நீல் என்ற ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஆகியோர் உள்ளனர். ஸ்பின் துறையில் இம்ரான் தாஹிர் உள்ளார். இவர் அல்லது அமித் மிஸ்ரா அணியில் நிச்சயம் இடம்பெறுவது உறுதி. சென்னை முன்னாள் வீரர் ஆல்பி மோர்கெல் டெல்லி அணியில் தற்போது இருக்கிறார். அவரை விளையாட வைக்க வாய்ப்பு குறைவென்றாலும் சென்னை அணிக்கு எதிராக அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி முயற்சிக்கும்.

சென்னை அணி (உத்தேசம்):
 
டோனி, ரெய்னா, பிரெண்டன் மெக்கல்லம், மைக் ஹஸ்ஸி, டிவைன் பிராவோ, டுபிளெஸ்ஸிஸ், ஜடேஜா, அஸ்வின், மோஹித் சர்மா, இர்பான் பதான், கைல் அபாட்/ஈஸ்வர் பாண்டே.

டெல்லி டேர் டெவில்ஸ்(உத்தேசம்):

ஜே.பி.டுமினி, மாயங்க் அகர்வால், டி காக், கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி/ஆல்பி மோர்கெல், சவுரவ் திவாரி, ஜெய்தேவ் உனட்கட், ஜாகீர் கான், மொகமது ஷமி, அமித் மிஸ்ரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து