முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வழக்கு: ராமலிங்க ராஜூக்கு 7 ஆண்டு சிறை

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

ஐதராபாத் - சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு தொடர்பான வழக்கில், அந்நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ராமலிங்க ராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதித்து, ஐதராபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. முன்னதாக, இந்த வழக்கில் ராமலிங்க ராஜு உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி தீர்ப்பளித்தார்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் லாபத்தை பல ஆண்டுகளாக மிகைப்படுத்திக் காட்டியதாக கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி அதன் அப்போதைய தலைவர் ராமலிங்க ராஜு தாமாக முன்வந்து தெரிவித்தார்.
இதையடுத்து ராஜு உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் 226 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 3 ஆயிரம் ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. 

விசாரணை முடிந்ததையடுத்து, மார்ச் 9ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஏப்ரல் 9ம் தேதிக்கு தீர்ப்பை மீண்டும் ஒத்தி வைப்பதாகவும் அன்றைய தினம் எக்காரணத்தைக் கொண்டும் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் உள்ள ராமலிங்க ராஜு உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரத்தை பிற்பகலில் வெளியிட்ட நீதிபதி, ராமலிங்க ராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதித்தப்பதாக தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து