முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி திருக்கல்யாணம்: ஹெலிகாப்டரில் மலர்கள் தூவ ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - சித்திரை திருவிழாவையொட்டி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவவும்,பன்னீர் தெளிக்கவும் ஏற்பாடு நடக்கிறது.  மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா வருகிற 21ம் தேதி காலை 11 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 30ம் தேதி காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் கோவிலின் வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடக்கிறது.

இதற்காக தோட்டக்கலைத்துறையின் மூலம் ஊட்டியில் இருந்து 5 லட்சம் எண்ணிக்கையில் பல்வேறு வண்ண பூக்கள் வரவழைக்கப்பட்டு திருக்கல்யாண மணமேடை அலங்கரிக்கப்படுகிறது. மேலும் பந்தல் அலங்கார நிபுணர்களும் வரவுள்ளனர். திருக்கல்யாணம் நடக்கும் போது கோவிலுக்கு மேல் தாழ்வாக வட்டமடிக்கும் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவவும்,பன்னீர் தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சில தனியார் நிறுவனத்தினர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.

திருக்கல்யாணம் அன்று சேதுபதி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தனியார் அமைப்பு மூலம் பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது. திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக கோவில் உள்ளேயும், வெளியேயும் 12 இடங்களில் மெகாசைஸ் டிஜிட்டல் டி.வி.க்கள் வைக்கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. திருமணத்தை நேரில் பார்க்கும் பக்தர்களுக்கு வசதியாக வடக்கு ஆடி வீதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து