முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது ராஜஸ்தான்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணியை ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டெல்லியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகல் மோதின. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. இந்த அணியில் தொடக்க வீரர்கள் அகர்வால் 37 ரன்களும், ஐய்யர் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தின. யுவராஜ் சிங் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற டுமினி 44 ரன்களும், மெத்யூஸ் 27 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிரங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆரம்பம் முதலே விக்கெட்கள் வில துவங்கின. ஆனாலும் நிழைத்து ஆடிய ரஹானே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இரங்கிய வீரர்கள் சோர்ப்ப ரன்களில் ஆட்டமிழக்க.  வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில் இருந்த ராஜஸ்தானுக்கு ஹுடா வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். அவர் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து