முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யம் ராஜூவிற்கு ஒருநாள் சம்பளம் ரூ.50

ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

ஐதராபாத் - தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் சத்யம் ராஜூவிற்கு தற்போது நாளொன்றுக்கு ரூ. 50 சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன தலைவர் பி.ராமலிங்க ராஜூ மீது கணக்கு மோசடி புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சத்யம் கப்யூட்டர்ஸ், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ கூறியது. இது தொடர்பாக ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐதராபாத் சிபிஐ தனிக்கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதோடு, ராமலிங்க ராஜூவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ராமலிங்க ராஜூவுக்கு கைதி எண் 4148 வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவர் செய்து வரும் வேலைக்கு நாளொன்றுக்கு ரூ. 50 ஊதியமாக வழங்கப்படுகிறதாம். அந்தப் பணத்தில் ரூ. 25 மட்டுமே அவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். மீதிப்பணம் அவரது வங்கிக் கணக்கில் சேமிக்கப் படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous April 14, 10:16

    இந்த ராஜுவுக்கு துணையாக இருந்த ஆடிட்டிங் நிறுவனம் என்ன ஆனது?

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து