முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பூங்கா திட்டத்தை ரத்து: மத்திய அரசை கண்டித்து போராட்டம்

திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

அமேதி - ராகுல் காந்திரியின் அமேதி தொகுதியில் உணவு பூங்கா திட்டத்தை திடீரென மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். உ.பி மாநிலத்தில் உளஅள ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் உணவு பூங்கா திட்டத்தை மத்திய அரசு திடீரென ரத்து செய்து அறிவித்துள்ளது. அமேதியில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இங்கு உணவு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் அந்த தொகுதியின் எம்பியும், காங்கிரஸ் கட்சியின் துணை தலைவருமான ராகுல் காந்தியின் கனவு திட்டமாகும். தற்போது மத்திய அரசு அதனை திடீரென ரத்து செய்துள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியின் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மத்திய அரசை எதிர்த்து வருகிற 17ம் தேதி ஜெகதீஷ் பூரில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமேதி காங்கிரஸ் கட்சி தலைவர் யோகேந்திர மிஸ்ரா கூறியதாவது, ராகுல் காந்தியின் கனவை மத்திய அரசு கலைத்து விட்டது. மத்திய அரசின் விவசாய விரோத போக்கு, மக்கள் விரோத போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் சந்திர காந்த் துபே கூறுகையில், அமேதி மற்றும் ரேபரேலியின் அனைத்து மக்கள் திட்டங்கலையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து