முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் தரவரிசை: சானியா - ஹிங்கிஸ் ஜோடிக்கு முதலிடம்

திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - டென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தை இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி பிடித்துள்ளது. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். சானியா, ஹிங்கிஸ் இடையிலான புரிதல் நன்றாக உள்ளது. இதனால் அந்த ஜோடி அடுத்தடுத்து மூன்று கோப்பைகளை வென்றுள்ளது. இதன் மூலம் சானியா புதிய சாதனை படைத்துள்ளார்.

பிஎன்பி பரிபாஸ் கோப்பை, மயாமி ஓபன் டென்னிஸ் போட்டி கோப்பை, டபுள்யூடிஏ ஃபேமிலி சர்க்கிள் கப் ஆகிய 3 போட்டிகளை சானியா, ஹிங்கிஸ் ஜோடி அடுத்தடுத்து வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிஸ் ஜோடி உலக டென்னிஸ் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் டென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை சானியா பெற்றுள்ளார்.

இந்த சாதனையை படைத்துள்ள முதல் இந்திய பெண் நான் என்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. நான் விளையாடும் வரை கடுமையாக உழைப்பேன். உங்கள் அனைவருக்கும் என் ஹக்என்று சானியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து