முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்லான் ஷா ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

ஈபோ - சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் இந்தியா 3 வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. மலேசியாவின் ஈபோ நகரில் 24வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, கனடா ஆகிய 6 அணிகல் பங்கேற்றன. லீக் சுற்றின் முடிவில் வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில், இந்திய அணி தென் கொரியாவை சந்தித்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால் பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் இந்திய அணி துணை கேப்டனும் கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் அபாரமாக செயல்பட்டு வெற்றிக்கு வழிவகுத்தார். பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி 3 வது இடம் பிடித்தது.
இந்த போட்டியில் வென்று வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் தளத்தில் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து