முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையுடன், ரஷ்யாவில் உயர் கல்வி

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

“ரஷ்ய அரசின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் மாநில விவகாரங்களுக்கான காமன்வெல்த் அமைப்பின் ஃபெடரல் ஏஜென்சி 50-க்கும் மேற்பட்ட ரஷ்யப்பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்து ‘ரஷ்யாவில் கல்வி பயில இதுவே சரியான தருணம்’ என்ற திட்டத்தினை, ரஷ்யாவில் மாணவர்களைக் கல்வி கற்க ஊக்கப்படுத்தும் நோக்கில் உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் இந்தியா உள்பட 13 நாடுகள் தேர்வு செய்யப்பட்டு, அந்நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரஷ்யாவில் கல்வி கற்க உதவித் தொகைகள் வழங்கப்பட உள்ளன” என்று தென்னிந்தியாவிற்கான ரஷ்யக் கூட்டமைப்பு தூதரகத்தின் தூதர் . செர்கெய் எல். கட்டோவ் தெரிவித்தார்.

“இந்த 13 நாடுகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், ‘ஒலிம்பியாட்’ (டீடலஅயீயைனள) எனப்படும் திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான மாணவர்கள் கண்டறியப்படுவர். இந்த நாடுகளைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு, ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளில் பயில உதவித் தொகைகள் வழங்கப்படும்” என்று தென்னிந்தியாவிற்கான ரஷ்யக் கூட்டமைப்பு தூதரகத்தின் துணைத் தூதர் . மைக்கேல் கர்பாதோவ் தெரிவித்தார்.

ஒலிம்பியாட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் தங்குமிடச் செலவுகளை தள்ளுபடி செய்தல் உள்பட 100 சதவீத கல்வி உதவித் தொகை வழங்கப்படும். முதுநிலை படிப்பு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குறுகிய கால படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பயண மற்றும் தங்குமிடச் செலவுகளைக்கூட வழங்க பல பல்கலைக்கழகங்கள் முன் வந்துள்ளன. மேலும் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.50-க்கும் மேற்பட்டபல்கலைக்கழகங்கள் இந்தக் கல்வி உதவித் தொகையை இந்திய மாணவர்களுக்கு வழங்க முன் வந்துள்ளன.

“உலகிலேயே மிக அதிக எழுத்தறிவு பெற்றவர்கள் (99.6ரூ) ரஷ்ய மக்களாவர். சர்வதேச அளவில் மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்டுள்ள நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். மேலும் ரஷ்ய உயர் கல்வி, அதிக தரத்தையும் நவீன பாடத் திட்டங்களையும் கொண்டுள்ளது. ரஷ்யாவில் தற்போது 200 நாடுகைளச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 650 அரசு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயில்வதற்கு வருகின்றனர். ரஷ்யாவின் கல்விக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பதுடன், கல்விக் கட்டணங்களும் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும்” என்று ரஷ்யப் பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனமான ஸ்டடி அப்ராட் -ன் மேலாண் இயக்குநர் . சி. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

ரஷ்யாவில் தற்போது இந்தியாவைச் சேர்ந்த 5000 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகளைப் பயின்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. இந்தக் கல்வியாண்டில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து