முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக 10 ஆயிரம் பெண்கள் தீச்சட்டி, பால்குடத்துடன் வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக 10 ஆயிரம் பெண்கள் தீச்சட்டி, பால்குடத்துடன் வழிபாடு

சென்னை, அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நீடுழி வாழவேண்டியும் மீண்டும் முதல்வராக கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா நீடுழி வாழ வேண்டியும் மீண்டும் முதல்வராக அரியணையில் அமர வேண்டியும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி, பால் குடம் எடுத்து பாலாபிசேகம் நடத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். கோவை புறநகர் மாவட்டம் சுகுணா புரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் , ஸ்ரீசந்தி மாரியம்மன் திருக்கோயில் ஆகியவற்றில் இந்த பால்குடம் பூத்தட்டு, தீச்சட்டிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். பாலக்கோடு மெயின்ரோடு வழியாக 5.5 கிலோ மீட்டர் தூரத்தில் குன்னியமுத்தூரில் அருள்மிகு சாந்தி துர்கா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் தீச்சட்டி, பால்குடம், பூத்தட்டு ஏந்தியும் பறவைக்காவடி மற்றும் பாலாபிசேகங்கள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளரும் மாநகராட்சி மேயருமான கணபதி ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே. சின்னராஜ், நகரசெயலாளர் நமச்சிவாயம், எஸ்.எம்.உசேன், மணிமேகலை, விஜயகுமார், செல்வதுரை, ரங்கராஜ் உள்ளிட்டோரும் நகர, ஒன்றிய, கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து