முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீண்டாமை ஒழிப்புக்காகவும் மோடி பாடுபடுகிறார்: ராஜ்நாத் சிங்

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செய்து வரும் பிரச்சாரம், வெறும் குப்பை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்பு பற்றியதும்தான்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி பேசினார்.

சுலாப் இன்டர்நேஷனல் சார்பில், ‘தீண்டாமை இனி இல்லை’ என்ற தலைப்பில் டெல்லியில் நிகழ்ச்சி நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தீண்டாமை ஒழிப்புக்கான பிரச்சாரத்தை மகாத்மா காந்தி தொடங்கிவைத்தார். நமது பிரதமர் மோடி கூட, இந்திய நாட்டை தூய்மையாக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளார். தூய்மை பிரச்சாரம் என்பது வெறும் குப்பை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதில் தீண்டாமை ஒழிப்பு போராட்டமும் உள்ளது. தீண்டாமையை ஒழிக்க இந்த நாடு எவ்வளவோ நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை நாங்கள் செய்வோம். ஒவ்வொருவரையும் நாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

முன்னதாக தலித் பெண்களுடன் ஒன்றாக அமர்ந்து ராஜ்நாத் சிங் மதிய உணவு சாப்பிட்டார். இதுகுறித்து ராஜ்நாத் கூறுகையில், ‘‘பெண்களுடன் ஒன்றாக நான் உணவு சாப்பிட்டேன். அவர்கள் என்னிடம் காட்டிய அன்பால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அந்தத் தருணம் எனக்கு வரலாற்று சிறப்புமிக்கது.

மக்களுக்குள் எந்த பேதமும் இருக்க கூடாது. உலகம் ஒரு குடும்பம். இதுதான் உலகத்துக்கு இந்தியா வழங்கும் முக்கிய செய்தி’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து