முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்த வழங்கப்பட்ட அனுமதிக்கு இடைக்கால தடை

செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

தாலிஅகற்றும்நிகழ்ச்சிநடத்ததிராவிடர்கழகத்தினருக்கு அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. 
டாக்டர்அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திராவிடர் கழகத்தின் சார்பில் ‘தாலி அகற்றும் நிகழ்ச்சி’ நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடத்துவதற்கு அனுமதிக் கேட்டு கடந்த மார்ச் 29-ந் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில், தாலி அகற்றும் போராட்டம் என்று இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி,  அகில இந்திய இந்து மகாசபா போலீசில் புகார் செய்தது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர், ‘தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்த தடை விதித்து கடந்த 12-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் 7 மணி வரை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ‘தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியாக முறையில் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்கினார். இந்தநிகழ்ச்சிக்குபோலீஸ்கமிஷனர்பிறப்பித்ததடைஉத்தரவைரத்துசெய்ததோடு, திராவிடர் கழகத்தின் நடத்தும் நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்தார். 
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, முன்பு அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், அந்த மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். 

இதற்கு அனுமதி வழங்கிய மூத்த நீதிபதி, இந்த வழக்கை செவ்வாய்கிழமை (இன்று) காலை 7 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு பதிவுத்துறை அதிகாரி முன்பு நேற்று காலையில் 6.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
பின்னர், இந்த வழக்கு நேற்றுகாலை 7.45 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தவழக்கை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, சிறப்புபிளீடர்ஐ. எஸ்.இன்பதுரை, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ.தியாகராஜன், வக்கீல் டி.வீரசேகரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். 

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அமைதியான முறையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதாக திராவிடர் கழகத்தினர் கூறியுள்ளனர். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தநிகழ்ச்சி நடத்தப்பட்டாலும், அதுநாட்டில்பெரும்பாலானமக்களின்கலாச்சாரத்தைகளங்கப்படுத்தும்விதமாகஇருக்கக்கூடாது. எனவே, இந்த நிகழ்ச்சியை நடத்தஅனுமதி வழங்கிய நீதிபதி டி.அரிபரந்தாமன் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்கின்றோம்’ என்று கூறியுள்ளனர். 
இந்த இடைக்கால தடை விதிப்பதற்கு முன்பே, திராவிடர் கழகத்தின்அதிகாலை முதலேதாலி அகற்றும் நிகழ்ச்சியை தொடங்கிவிட்டனர். தீர்ப்பு பிறப்பிப்பதற்குமுன்பு அனைத்து நிகழ்ச்சியும் முடிவுக்கும் வந்துவிட்டது. தற்போது, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால், திராவிடர் கழகத்தினர் நடத்திய நிகழ்ச்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வேறு ஏதாவது ஒரு அமைப்பு, மக்களின் கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிரான நிகழ்ச்சியை மேற்கொண்டால், இந்த இடைக்கால தடை அவர்களுக்கு இடையூறாக அமையும் என்று வக்கீல்கள் கூறுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து