முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மீன்களின் இனப்பெருக்கத்துக்காக வங்காள விரிகுடா கடலில் 45 நாட்களுக்கு மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியது. 45 நாட்களுக்கு விசைப்படகு, பைபர் படகுகளில் சென்று மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்.கட்டுமர மீனவர்கள் மட்டுமே கொஞ்ச தூரம் கடலில் சென்று மீன் பிடிப்பது வழக்கம்.

சென்னை காசிமேடு, பழவேற்காடு, பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.காசிமேடு பகுதியில் மட்டும் 900 விசைப்படகுகள் உள்பட 2 ஆயிரம் படகுகள் நேற்று கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடற்கரையோரம் வலைகள் மற்றும் படகுகளை சரி செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.
இதேபோல் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், வேதாரண்யம், கோடியக்கரை, தூத்துக்குடி, பூம்புகார், தரங்கம்பாடி, பழையார் உள்பட பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
மீன்பிடி தடைகாலத்தில்  மீனவர்ககளுக்கு உதவி தொகையை அரசு வழங்குகிறது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து