முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனதா பரிவார் கட்சி உதயமானது

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - புது டெல்லியில் ஜனதா பரிவார்  கட்சி உதயமானது. இந்த கட்சிக்கு மக்களவையில் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 30 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். புதிதாக அமைக்கப்பட்டுள்ளஜனதா பரிவார் கட்சியில் சமாஜ்வாதி கட்சி,ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மதச்சார்பற்ற ஜனதா தளம் சமாஜ் வாதி ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய லோக்தளம் கட்சிகள் ஆகியவை உள்ளன.

இந்த கட்சிகள் இணைந்த புதிய கட்சிக்கு முலாயம் சிங் தலைவராக இருப்பார். புதிதாக துவங்கப்பட்டுள்ள ஜனதா பரிவார் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து 6பேர் கொண்ட குழு தீர்மானிக்கும். இந்த குழுவில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா,லாலு பிரசாத் யாதவ். சரத் யாதவ் ராம் கோபால் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
ஜனதா பரிவாரில் இடம் பெற்றுள்ள சமாஜ் வாதி கட்சிக்கு மக்களவையில் 5உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 15 உறுப்பினர்களும் உள்ளனர்.

உத்தரப்பிரதேச்த்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்கிறது. 403 உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு 232 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிக்கு மக்களவையில் 4 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மாநிலங்களவையில் அந்த கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளார்.ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு மக்களவையில் இரு உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் உள்ளனர்.

முன்னாள்  பிரதமர் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் இரு உறுப்பினர்களும் மாநிலங்களவையில்ஒரு உறுப்பினரும் உள்ளனர். இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு மக்களவையில் இரு உறுப்பினர்களும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் இருக்கிறார்கள்.எனவே இந்த கட்சிகள் சேர்ந்த புதிய கட்சியான ஜனதா பரிவாருக்கு மக்களவையில் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 30 உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து