முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருடன் ஆஸ்திரேலிய அமைச்சர் ஜூலி சந்திப்பு

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - கடத்தல் வணிகத்தைத் தடுக்கும் விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக, ஆஸ்திரேலியாவிடம் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை ஆஸ்திரேலிய நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி, பிஷ்ப் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஜூலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட பின்னர் இந்தியாவுக்கு இடையேயான உறவில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன இந்த சந்திப்பின் போது, சட்டவிரோதமாக கடத்தல் வணிகத்தை தடுப்பது அவசியம் என்பதை முதல்வரிடம் வலியுறுத்தினோம். இந்த கடத்தல் வணிகத்தை தடுக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.

இந்த கடத்தலில் சாமானிய மக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், அவர்களை ஆஸ்திரேலியாவிலேயே மறுகுடியமர்வு செய்திடவும் நடவடிக்கை எடுக்க மாட்டோம். கடத்தல் வணிகத்தில் ஈடுபடுவோர் ஆஸ்திரேலியாவில் பரவி இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்றார் ஜூலி பிலிப். இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து