முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் உள்ள கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ராஜினாமா

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

பெல்லாரி - இரும்பு தாது கடத்தல் வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக பாஜக எம்எல்ஏ ஆனந்த் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ரெட்டி சகோதரர்களுக்கு நெருங்கியவரான ஆனந்த் சிங், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள விஜயநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த பாஜக ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக பதவி வகித்த போது சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக கர்நாடகாவின் லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே கடந்த 2013ம் ஆண்டு சிபிஐ போலீசார் இவர் மீது 1.45 டன் இரும்பு தாது முறைக்கேடாக ஏற்றுமதி செய்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் க‌ர்நாடக சிஐடி போலீஸார் கடந்த ஆண்டு ஆனந்த் சிங் மீது பெல்லாரி அரசு கிடங்கில் இருந்து 17,086 டன் இரும்பு தாது கடத்தியதாக மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பெங்களூருவை அடுத்துள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆனந்த் சிங் கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஐஜி கமல் பன்ட் மூலமாக சட்டப்பேரவை சபாநாயகர் காகோடு திம்மப்பாவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இரும்பு தாது கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் எனது தொகுதியின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட இயல‌வில்லை. எனவே எனது தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயக‌ர் காகோடு திம்மப்பா விரைவில் பாஜக எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வார். இதையடுத்து பெல்லாரியில் உள்ள விஜயநகர் தொகுதிக்கு மே மாதத்தில் இடைத் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து