முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா தேர்தல்: திரிணாமுல் கட்சிக்கு அமோக வாய்ப்பு

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா - கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாரதிய ஜனதா கட்சியால் 6 வார்டுகளில் மட்டுமே வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் காலூன்றி விடுவது என்ற திட்டத்தில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில்  இந்த விவகாரத்தை முன்வைத்து பிரசாரம் செய்தால் எப்படியும் திரிணாமுல் கட்சியை வீழ்த்தி விடலாம் என்பது பாஜகவின் கனவாக உள்ளது. அதேபோல் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கானது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் கடும் சரிவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. கொல்கத்தா மாநகராட்சிக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இது தொடர்பான கருத்து கணிப்பில், கொல்கத்தா மாநகராட்சியை திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி 6 வார்டுகளில் மட்டுமே வெல்ல முடியும் என்று அந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் 141 வார்டுகளை கொண்ட கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி- நீல்சன் நிறுவனங்கள் உள்ளிட்டவை இணைந்து நடத்திய அந்த கருத்து கணிப்பில்,
 
திரிணாமுல் காங்கிரஸ் 103 இடங்களையும், இடதுசாரிகள் 31 இடங்களையும், பாஜக 6 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 95 வார்டுகளை கைப்பற்றி இருந்தது. இடதுசாரிகள் 2010ல் 32 வார்டுகளைக் கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துக் கணிப்பின் மூலம் பாஜகவின் வாக்கு சதவீதம் 12 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து