முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்

புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தல் மே மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன், 2வது முறையாக இத்தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்தின்போது கேமரூன் பேசியதாவது:இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நல்லுறவு நாடுகளுள் ஒன்று இந்தியா.
நான் 2வது முறையாக பிரதமரானால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரம் இடம் கிடைக்க ஆதரவு அளிப்பேன். இந்தியாவுடன் நமக்கு வலிமையான வர்த்தக தொடர்பு உள்ளது. மான்செஸ்டர் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும். அங்கு இந்திய கேலரி அமைக்கப்படும். ஆசியா கண்டத்தை சேர்ந்த யானைகளை பாதுகாக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். யானை தந்தங்கள் விற்பனை தடை செய்யப்படும்.
உலகளவில் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் வர்த்தக உறவு மேம்படுத்தப்படும்.

முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, இந்தியாவுக்கு ஏற்றுமதியை அதிகரித்து அந்நாட்டுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு டேவிட் கேமரூன் பேசினார்.ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். பிரான்ஸ், ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அமைதியை விரும்பும் நாடான இந்தியாவுக்கு ஐநா சபையில் அங்கீகாரம் கிடைப்பது இந்தியாவுக்கான உரிமை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து