முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமி விருது வென்ற இந்தியர் ‘ரிக்கி கேஜ்’

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

· ‘பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் கிராமி விருது வென்ற முதல் இந்தியர்

· சிறிய வயதிலேயே கிராமி விருது வாங்கிய முதல் இந்தியர்

· கிராமி விருது வென்ற நான்காவது இந்தியர்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 57வது கிராமி விருது வழங்கும் விழாவில், இந்தியாவை சேர்ந்த ரிக்கி கேஜ், தனதுவிண்ட்ஸ் ஆஃப் சம்சாரா (Winds of Samsara) எனும் இசை ஆல்பத்திற்காகநவீன காலத்தின் சிறந்த ஆல்பம் எனும் பிரிவில் கிராமி விருதினை வென்றார். உலக இசை வட்டாரத்தில் "கிராமி விருது" ஒரு பெருமைக்குரிய விருதாகும்.

தென்னாப்பிரிக்க கலைஞர் வவ்டர் கெல்லர்மேன் (Wouter Kellerman) உடன் இணைந்து ரிக்கி கேஜ் உருவாக்கியவிண்ட்ஸ் ஆஃப் சம்சாரா எனும் இந்த ஆல்பம் இந்தியர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்த ஆல்பம், தொடர்ந்து 12 வாரங்களுக்கு #1 on the Billboard New Age Chartன் TOP10 பட்டியலில் இடம்பெற்றிருந்தது. மேலும், #1 on the ZMR World Radio Charts-லும் இந்த இசை ஆல்பம் இடம்பெற்றிருந்தது.

விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா எனும் இசை ஆல்பத்தை ரிக்கி கேஜ் அவர்கள் இரண்டு வருட உழைப்பில், ஐந்து கண்டங்களைச் சேர்ந்து சுமார் 120 இசைக்கலைஞர்களால் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 இசைக்கலைஞர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கரோலினாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் ரிக்கி கேஜ். அடிப்படையில் பல் டாக்டரான இவர், கல்லூரியில் படிக்கும்போதே விளம்பரங்களுக்கான ஜிங்கிள்ஸ் வாசிக்கத் தொடங்கிவிட்டார். ஏர் இண்டியா, மைக்ரோசாஃப்ட், லெவிஸ் என பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதுவரை சுமார் 3,000 விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ள ரிக்கி கேஜ், 5 திரைப்படங்ளுக்கும் இசையமைத்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் துவக்க நிகழ்ச்சிக்கும் ரிக்கி கேஜ் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து