முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, ஏப்.17-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் புகழ்பெற்ற சித்திரை திருவிழா வருகிற 21ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கிறது. இதன் முக்கிய உற்சவமான திருக்கல்யாண வைபவம், 30ம் தேதி வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 9.30 மணிவரை நடைபெறவுள்ளது.


திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு கோபுரம் வழியாக, 6 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசன முறையில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளினாட்டி பக்தர்கள் வசதிக்காக கோவிலின் இணையதளத்தில் www.maduraimeenakshi.org வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக மீனாட்சி அம்மன் கோவிலின் பிரதான டிக்கெட் விற்பனை நிலையத்திலும், தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க ரூ.500 மற்றும் 200 கட்டண சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் கீழ்க்கண்ட 7 ஆளறிச்சான்றிதழ்களில் ஏதாவது ஒரு சான்றிதழை தெரிவித்து முன்பதிவு செய்யலாம். பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுநர் உரிமம், ரேசன் கார்டு, ஆதார் அட்டை போன்ற சான்றிதழ்கள் மற்றும் செல்போன் எண்ணுடன் ஈ மெயில் முகவரி இருப்பின், தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.


மேலும் இணை ஆணையர் செயல், அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், மதுரை என்ற முகவரிக்கு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்தினை ஆளறிச்சான்றுகள் ஏதேனும் ஒன்றை இணைத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 25ம் தேதிக்கு மேல் வரும் விண்ணப்பங்கல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனுமதிக்கப்பட்ட இடத்தை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், விண்ணப்பித்துள்ள பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் செல்போன் எண்ணுக்கு 25ம் தேதிக்கு பிறகு அனுப்பப்படும்.


எஸ்எம்எஸ் கிடைக்கப்பெற்றவர்கள் ஆன்லைன் மூலமாகவும் தொகையை செலுத்தி அதனுடன் கிடைக்கும் கட்டணச்சீட்டை 27ம் தேதி முதல் கோவில் அலுவலகத்தில் கொடுத்து உரிய கட்டண சீட்டை பெற்றுக் கொள்ளலாம். அல்லது எஸ்எம்எஸ் கிடைக்கப்பெற்றவர்கள் 27ம் தேதி முதல் கோவில் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கட்டணச்சீட்டு விற்பனை நிலையத்தில், கட்டணச் சீட்டிற்கான தொகையினை செலுத்தி கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட விவகரங்களை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து