முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் அத்துமீறல்: பாக். ராணுவத்துக்கு இந்தியா பதிலடி

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஏப்.17-
ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்திய தரப்பில் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும் இதனை மீறி ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகிறது.

பாஜ தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைந்த சமயத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன. இதில் எல்லையோர கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு ராணுவத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து எல்லை தாக்குதல் குறைய தொடங்கியது.


இந்நிலையில் கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை அருகே இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். தனானியங்கி இயந்திர துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். சுமார் 20 நிமிடம் இந்த சண்டை நீடித்தது. இந்திய தரப்பில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. பாகிஸ்தான் தரப்பு குறித்து உடனடியாக தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து