முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செப்டம்பர் மாதம் வரை என்.சீனிவாசன் நீடிப்பார்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி,ஏப்17
இந்திய கிரிக் கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்,சீனிவாசன் இந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகுர்இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கிரிக் கெட் வாரியத்தின் பிரதிநிதியான என் ,சீனிவாசன் தற்போது சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி தலைவர் பதவியை 2014ம்ஆண்டு ஜூலை மாதம் முதல் 2016ம்ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியா கிரிக் கெட் வாரிய பிரதி நிதி வகிக்க முடியும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பார்.அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில்  உரிய முடிவு எடுக்கப்படும்.


இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது டங்கன் பிளட்சர் பயிற்சியாளராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் முடியஒன்றரை மாதம் மட்டுமே உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் அடுத்த சர்வதேசப்போட்டிகள்  ஜூன் மாதம் துவங்குகிறது.
 எனவே புதிய பயிற்சியாளரை நியமிப்பதுக்குறித்து நானும் கிரிக் கெட் வாரியத்தலைவருமான டால்மியாவும் பல்வேறு நபர்களிடம் ஆலோசனை  செய்து வருகிறோம்.

இந்திய கிரிக்கெட்டின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. புதிய பயிற்சியாளரை நியமனம் செய்வதுக்குறித்து இந்திய அணியின் மூத்த வீரர்கள் மற்றும் இந்திய அணியின் தலைவர் கருத்தை கேட்போம். மிகச்சிறந்த பயிற்சியாளர் இந்திய அணிக்கு நியமிக்கப்படுவார்.


இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்று கேட்கிறார்கள். இந்த  நேரத்தில் யார் பெயரையும் தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளேன்.இந்தியாவில் பெண்கள் கிரிக் கெட்டை மேம்படுத்த வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. இதனால் இந்திய பெண்கள் அணி அதிக போட்டிகளில் ஆட ஏற்பாடு செய்யப்படும்.


2017ம்ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆடும்.இன்னும் 2ஆண்டுகளில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக் கெட் போட்டியில் ஆட வேண்டி இருப்பதால் உரிய முறையில் தயாராக வேண்டியிருக்கிறது.எனவே பல்வேறு  வெளிநாட்டு போட்டிகளில் இந்திய பெண்கள் அணி ஆடும் இவ்வாறு அவர் தெரிவித்தார். அனுராக் தாகுர் பாஜக தலைவர் ஆவார். இவர் ஹமிர் புர் தொகுதி எம்.பி ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து