முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் கிடைத்த பயன் என்ன? சீதாராம் யெச்சூரி கேள்வி

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு கிடைத்த பலன் என்ன? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 நாள் தேசிய மாநாடு, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாளான 19ம் தேதி உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மாநாட்டில் கட்சி வெளியிடவுள்ள தீர்மானங்கள் குறித்து சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்த வரையில், மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு கடைப்பிடித்த அதே கொள்கையைத்தான், தற்போது மோடி தலைமையிலான அரசும் பின்பற்றி வருகிறது. இதற்கு முன்பிருந்த பிரதமர்களைவிட, மிக அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மோடி மேற்கொள்கிறார். இதன் மூலம் நாட்டு நலனுக்கு அவர் கொண்டு வரப் போவது என்ன? இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், உறுதியான நன்மை எதுவும் கிடைக்கப் போவதில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் வெளிநாட்டுக் கொள்கை கவலையளிக்கிறது. ஏனெனில், அவை அமெரிக்க நலன் சார்ந்தவையாக உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நலனுக்கானவை அல்ல என்று யெச்சூரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து