முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் மேலாண்மை பயிற்சி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர் பயிற்சி மையத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பாக, வட்டாட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பணி செய்யும் பயிற்சியினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பாக, 32 பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களுக்கு  பேரிடர் மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்வதற்காக நேற்று (16.4.2015) நடைபெற்ற மூன்று நாட்கள் பயிற்சியினை கூடுதல் தலைமை செயலாளர்ஃவருவாய் நிர்வாக ஆணையரும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் தலைவருமான முனைவர்.டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.வே.க.சண்முகம் முன்னிலையில்,  வருவாய்த்துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார்  குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியதாவது,

 “ மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்வதற்காக, மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை பிரிவு ஒன்றினை ஏற்படுத்தியும், 32 வட்டாட்சியர்கள் (பேரிடர் மேலாண்மை) பணியிடங்கள் உருவாக்கியும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைத்து வட்டாட்சியர்களும் முழு மனதோடும், முழு அளவோடும் செயலில் பணியாற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் போர் வரும், வராமலும் போகும், ஆனாலும், இராணுவத்திற்கு முதலாவதாக அதிக நிதி இந்திய அரசு வழங்கி வருகிறது. அதுபோல் சூறாவளி, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ, நிலச்சரிவு போன்ற பல்வேறு பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் வரும், அல்லது வராமலும் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட போது,  அம்மா அவர்களது அரசு மிகச் சிறப்பாக மீட்பு பணியில் செயல்பட்டது. உலக நாடுகள் வியக்கும் வகையிலும், வழிகாட்டியாகவும் தமிழகத்தில் சுனாமி தாக்குதல் மீட்பு பணி நடைபெற்றது. 

 இதனை கருத்தில் கொண்டு  அம்மா அவர்களது அரசு பேரிடர் காலங்களில் தயார் நிலையில் எப்போதும் இருப்பதற்காக வருவாய்த்துறையின் கீழ் ஒரு தனி துறையாக பேரிடர் மேலாண்மை துறை உருவாக்கப்பட்டு தற்போது மாவட்டங்கிளல் 32 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் எல்லாவிதமான பேரிடர் காலங்களிலும் எப்போதும் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு பல்வேறு விதமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். எப்போது பேரிடர் வந்தாலும் அக்காலங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்படுதல் வேண்டும். அதற்காக தான் இப்பயிற்சி உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பணி புதிதாக உருவாக்கப்பட்டு நீங்கள் இப்பணியில் முதல் முறையாக பணியாற்றி வருகிறீர்கள்.
  இப்பணியில் நீங்கள் செல்லுகின்ற இடத்தில், முழு அற்பணிப்புடனும், தயார் நிலையில் இருந்தாலும் பொதுமக்கள் தயார் நிலையில் இருப்பதில்லை. மேலும், நாம் களத்திற்கு செல்லும் போது பல்வேறு மனநிலையில் உள்ள மக்களை சந்திக்க நேரிடும், அப்போது நாம் மக்களுக்கு ஏற்றவாரு அந்த நேரத்தில் செயல்பட வேண்டும். காஞ்சிபரம் மாவட்டத்தில் கடந்த வருடம் மௌலிவாக்கம் கட்டடம் இடிந்து பல்வேறு மக்கள் உயிரிழந்தனர். அப்போது மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இரவும், பகலும் தங்களை மறந்து மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட்டனர்.
  பேரிடர் மேலாண்மை என்பது திட்டமிடல், ஒருமுகப்படுத்துதல் மற்றம் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கும் ஒரு செயலாகும். பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களின் பணியானது, மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை செயல்படுத்துதல், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை நிர்வகித்தல். மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தினை தயார் செய்தல். 13-வது நிதிக்குழு ஒதுக்கீடு தொகையை பயன்படுத்துதல். மாவட்டத்திலிருந்து மாநில நிவாரண ஆணையருக்கு பேரிடர் நிவாரணம் குறித்த பிரேரணைகளை அனுப்புதல். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண்ம வழங்குதல் மற்றும் பயனீட்டு சான்று சமர்ப்பித்தல். வருவாய் மற்றும் பிறதுறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல். பாதிப்பிற்கு இலக்காகும் சமூகத்தினருக்கு பேரிடர் தயார் நிலை குறித்து பயிற்சியளித்தல். மாநிலகணக்காயரின் தணிக்கை மற்றம் அது தொடர்பான பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகும்.
  மேலும், இந்த மூன்று நாட்கள் பயிற்சியில், பேரிடர் மேலாண்மையின் அடிப்படைகள், பேரிடர் அடிப்படையில் தமிழ்நாட்டின் அமைப்பு குறித்த விளக்கம், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 குறித்த விளக்கம். சமுதாய அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை திட்டத்தின் குறிக்கோள்கள். இந்திய பேரிடர் இணையதள வசதி. பல்வேறு பேரிடர்களை வீடியோ மூலம் தெளிவுபடுத்தல். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமையின் குறிக்கோள் மற்றும் பணிகள். மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) பணிகள். மாவட்ட அளவில் கணக்குள் பராமரித்தல் ஆகும். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக கட்டுபாட்டில் இயங்கி வரும் மாநில அவசர கட்டுபாட்டு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சோழிங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம் மற்றும் முன்னெச்சரிக்கை கருவி அமைக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 மக்களுக்கு சேவை செய்யும் வருவாய்த்துறை மற்ற துறைகளுக்கு தாய் துறை ஆகும். இத்துறையின் கீழ் தற்போது பேரிடர் மேலாண்மை துறை செயல்பட்டு வருகிறது. உங்கள் பணி புனிதமான பணி, முக்கியமான பணி. விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்ற நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்றார்அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார்  .
  இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் .எல்.இராஜா, சென்னை பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் .எஸ்.கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் .ஆர்.பன்னீர்செல்வம் (செங்கல்பட்டு), மரு.டி.பரிதாபேகம் (தாம்பரம்) மற்றும் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து