முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர்,  இந்தியாவின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் சக்தி படைத்த அக்னி - 3 ஏவுகணை  நேற்று காலை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையானது 3000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து தாக்கக் கூடிய வல்லமை படைத்ததாகும். அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று தாக்கும் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை சுமார் 3000 கி.மீ. தூர இலக்கை துல்லியமாகக் குறி வைத்து அழிக்கும் திறன் கொண்டது.
ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தின், தம்ரா பகுதியின் வீலர் தீவு கடற்பகுதியில் நேற்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதில் இந்த சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஒரு பயன்பாட்டு சோதனை என்றும் இது வெற்றிகரமாக இருந்ததாகவும், சோதனை மைய இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்தார். நேற்றைய சோதனையில் 3000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை நோக்கி பாய்ந்த ஏவுகணை 20 நிமிட பயணத்தில் இலக்கை துல்லியமாக தாக்கியது. தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, இந்த ஏவுகணை 2 கட்டங்களாக செயல்படும். மொத்தம் 50 டன் எடை கொண்ட இந்த ஏவுகணையின் நீளம் 17 மீட்டராகும். சுற்றளவு 2 மீட்டர். இந்த ஏவுகணையில் ஒன்றரை டன் எடை கொண்ட அணு ஆயுதம் மற்றும் பிற ஆயுதங்களை பொருத்த முடியும். இது 1,500 கிலோ எடையுள்ள வெடிப் பொருளை ஏந்திச் சென்று தாக்கவல்லது. இந்த ஏவுகணையை மொபைல் லாஞ்சர் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து