முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் மின் பற்றாக்குறை இல்லாத நிலைமையை ஏற்படுத்தவும் மத்திய அரசு துணை நிற்கும்: மத்திய அமைச்சர் உறுதி.

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வும், தமிழக மக்களின் வளர்ச்சிக் காகவும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உரிய வழிவகைகளை செய்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்த மத்திய எரிசக்தித்துறை இணை அமைச்சர் பியூஸ் கோயல் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:தமிழகத்தின் முன்னேற்றதிற்கான வழிவகைகளை மோடி அரசு செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மே மாதம் 2-ந் தேதி மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்திற்கு வருகை தந்து அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று அந்த பகுதி மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கண்டறிந்து அதை நிறைவேற்றுவதற்குரிய முயற்சிகளை பிஜேபி அரசு செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக மின்சார பிரச்னை, மீனவர்கள் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவையில் டெக்ஸ்டைல் துறை வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம். இதேபோல அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழகத்தின் மின் பற்றாக்குறை இல்லாத நிலைமையை ஏற்படுத்தவும் மத்திய அரசு துணை நிற்கும் .இவ்வாறுபியூஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து