முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோலிய அமைச்சகத்தில் ஆவண திருட்டு வழக்கு

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப் 17:
மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெட்ரோலிய அமைச்சகத்தில் நிகழ்ந்த ஆவணத் திருட்டு தொடர்பாக ஐந்து பெருநிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிட மிருந்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

எனினும், அந்த ஆவணங்கள் ரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தனவா என்பதை அறியாமலேயே போலீஸார் தங்களைக் கைது செய்திருப்பதாக நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதை அடிப்படையாக வைத்து அவர்கள் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனுவை கடந்த 10ம் தேதி விசாரித்த கீழமை நீதிமன்றம், மேற்படி ஆவணங்கள் ரகசிய ஆவணங்களாக வகைப் படுத்தப்பட்டிருந்தனவா என் பதை அமைச்சகம் தெளிவு படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சகத்தைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி கூறும் போது, குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட எட்டு ஆவணங்களும் ரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்டவை. அவற்றில் எந்த ஓர் ஆவணமும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து