முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகள் திறந்ததும் இலவச பாடப்புத்தங்கள், சீரூடை: அமைச்சர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி சென்னை, டி.பி.ஐ. வளாக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறையின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிகள் திறக்கும் நாளன்றே இலவச பாடபுத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் . கே.சி. வீரமணி, சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மாநாட்டு வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களோடு  ஆய்வு மேற்கொண்டார். 

2011 - 2012ஆம் ஆண்டு முதல் 2014 - 2015ம் ஆண்டு வரை பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள் மற்றும் அந்த றிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் மேலும் வரும் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையினால் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2015-2016ஆம் கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புவியியல் வரைப்படம், சீருடைகள் மற்றும் இதர மாணவர்கள் நலத்திட்ட பொருட்களும் வழங்குவதற்கு தேவையான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர்  . த.சபிதா,, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் . பூஜா குல்கர்னி,, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர்  மைதிலி கே. இராஜேந்திரன்,, பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் சுபோத் குமார், பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த துணைச் செயலாளர்கள், அனைத்து இயக்குநர்கள்  மற்றும் இணை இயக்குநர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து