முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே வார விழா பொது மேலாளர் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

தெற்கு ரெயில்வே சார்பில் 60–வது ரெயில்வே வார விழா சென்னை பாரிமுனை அருகே உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில்  நடந்தது. இந்த விழாவுக்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) அசோக் கே.அகர்வால் தலைமை தாங்கினார். விழாவில் ரெயில்வே வாரிய முன்னாள் உறுப்பினர் (இயந்திரவியல்) எஸ்.தசரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் துணை பொது மேலாளர் எஸ்.கே.சர்மா, தலைமை பணியாளர் அலுவலர் எச்.ஸ்ரீனிவாஸ், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி டி.லட்சுமணன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கு பெற்றனர். தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், மதுரை ஆகிய 6 கோட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள், ரொக்கப்பரிசுகள் ஆகியவற்றை பொதுமேலாளர் அசோக் கே.அகர்வால் வழங்கினார்.

இதே போல், சென்னை கோட்டம் சார்பில் நேற்று காலை 60–வது ரெயில்வே வார விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கோட்ட மேலாளர் அனுபம் சர்மா தலைமை தாங்கினார். இதில் கோட்ட மேலாளர் மனைவி பாரதி சர்மா, கூடுதல் கோட்ட மேலாளர்கள் பிரபாகர் மற்றும் மோகன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சென்னை கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள், ரொக்கப்பரிசுகளை கோட்ட மேலாளர் மனைவி பாரதி சர்மா வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து