முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது போலீசார் வழக்கு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

மருத்துவகல்லூரியில் சீட்டு வாங்கித்தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம், பொன்னங்கிபுரத்தில் வசிப்பவர் டாக்டர் நசீர்அகமது. இவர் நரம்பியல் நிபுணர். மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மனைவியும் டாக்டராக உள்ளார். சென்னை மாநகராட்சி மருத்துவ அதிகாரியாக பணியாற்றுகிறார்.

நசீர் அகமது கடந்த ஆண்டு, மே மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தனது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கித்தருவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.50 லட்சம் பணம் வாங்கினார்கள் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் தமிழக அரசில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றும் மோகன்ராஜ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். செல்வகுமார் என்பவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் மீது வழக்கு மட்டும் பதிவு செய்தால் போதாது, அவர் மீது கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என்றும் புகார்தாரர் டாக்டர் நசீர்அகமது தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து