முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் மாட்டு வண்டி போராட்டம்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

நாக்பூர், ஏப்.18-
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் வந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்த சட்டத்துக்கு எதிராக நாளை டெல்லியில் ராகுல் தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மத்திய  அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. மேலும் அவர்களுக்கு மறுவாழ்வு, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றில் எந்த சமரசமும் கிடையாது என்று பேசினார்.


அதே வேளையில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் போராட்டம் நடத்தினர். அப்போது மாட்டுவண்டியில் வந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது முகுல் வாஸ்னிக் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் முழுக்க முழுக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு எதிரானதாகும்.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களை மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ள கூடியதாகும். மத்தியில் ஆட்சியைப்பிடித்துள்ள பாஜ அரசு முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் நலன்களை பாதுகாக்கக் கூடிய அரசாகும். மேலும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து