முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ 3. லட்சம் நிவாரணத் தொகை

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெல்லியாளம் 1 கிராமத்தில் வசித்த . விஜயகுமார் (வயது 38), த-பெ. ஆறுமுகம் என்பவர் 15.04.2015 அன்று இரவு 10.30 மணியளவில் தேயிலை தொழிற்சாலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வன அலுவலர், கூடலூர் கோட்டாட்சியர் ஆகியோர் தமிழக அரசின் சார்பாக ஆறுதல் கூறினர். பிரேத பரிசோதனைக்கு பின் உடனடியாக நிவாரண தொகை ரூபாய் மூன்று இலட்சம் வழங்கப்பட வேண்டும் என்று இறந்தவரின் குடும்பத்தார் வைத்த கோரிக்கையினை ஏற்று தமிழக அரசின் உத்திரவுப்படி வனத்துறை சார்பாக உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலர்  பாஸ்கர பாண்டியன் ரூபாய் 3.00 இலட்சத்தை நிவாரணத் தொகையாக இறந்தவரின் மனைவி திருமதி. கமலாதேவியிடம்; 16.04.2015 அன்று வழங்கினார்.உடன் மாவட்ட வன அலுவலர் . பத்ரசாமி  கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.விஜய்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து