முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரிவினைவாதத்தலைவர் மஸ்ரத் ஆலம் கைது: கிலானி வீட்டுக்காவலில் வைப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடத்திய பேரணியில் பாகிஸ்தான் கொடி வைத்திருந்த தொண்டர்கள். அடுத்தபடம் கைது செய்யப்பட்ட காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர் மஸ்ரத் ஆலம்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேரணி நடத்திய காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பிரிவினை வாதத்தலைவர் செய்யது அலி கிலானி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

காஷ்மீரில் கடந்த 2நாட்களுக்கு முன்னர்ஹூரியத்   மாநாட்டு அமைப்பினைச்சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினார்கள்.
பிரிவினை வாதத்தலைவர் செய்யது அலி  கிலானி டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு தற்போது திரும்பியுள்ளார்.அவரது வருகையையொட்டி ஶ்ரீநகரில் ஹூரியத் அமைப்பினர் இந்த பேரணியை நடத்தினார்கள்.

இந்த பேரணிக்கு மஸ்ரத் ஆலம் தலைமை தாங்கினார்.அவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த4ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மாதம் விடுதலை ஆனவர் ஆவார். இந்த பேரணி ஶ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து கிலானி வீடு வரை நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான ஹூரியத் அமைப்பினர் கலந்து கொண்டார்கள்.  பேரணியில் சிலர் பாகிஸ்தான் தேசியக் கொடியை கையில் எடுத்து வந்தனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள்.
மேலும் அந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹதர் போரா என்ற இடத்தில் பாகிஸ்தானின் தேசியக் கொடியையும் ஏற்றினார்கள்.

ஸ்ரீநகர் போராட்டத்தில் கல்வீச்சு ,தடியடி


ஜம்மு காஷ்மீரில் உள்ள டிரால் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து நேற்று டிரால் பகுதியிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டது.அப்போது பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினார்கள். இந்த மோதலில் 2போலீசார் உள்பட 12பேர் காயம் அடைந்தார்கள் என ஒருபோலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
நவ் ஹட்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஜாமியா மஸ்ஜித்  மசூதியில்  நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனை முடிந்ததும் ராணுவத்தினரின் நடவடிக் கைகளை கண்டித்து சாலைகளில் போராட்டம் நடந்தது. அமைதியாக துவங்கிய இந்த போராட்டத்தில் விரைவில் வன்முறை வெடித்தது. அப்போது  பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு நடந்தது. வன்முறையாளர்களை விரட்டுவதற்காக போலீசார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினார்கள்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல் பட்ட இந்த அமைப்பினரின்  செயல் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹூரியத் அமைப்பினர் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றியது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் உடனடியாக காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது செய்யதுவை தொடர்புகொண்டு பேசினார்.

இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. பாகிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றியவர்கள் மீது உடனடியாக நடவடிக் கை எடுங்கள் இல்லை யென்றால் மத்திய அரசு நடவடிக் கை எடுக்கும் என்று அப்போது அவர் எச்சரித் தார்.
இந்த நிலையில்  ஜம்மு காஷ்மீர் முதல்வர்  முப்தி முகமது செய்யது பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றிய ஹூரியத் அமைப்பினரை எச்சரித்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேசியக் கொடி ஏற்றுவதையும் கோஷம் எழுப்புவதையும் ஏற்க முடியாது இந்த செயலை செய்தவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் கூறினார்.

இதற்கிடையில் ஹூரியத் அமைப்பின் நடவடிக் கையை கண்டித்து பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் பிரிவினை வாத தலைவர்கள் சையது அலி கிலானி,மஸ்ரத் ஆலம், மற்றும் பீர் சைபுல்லா ஆகியோர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹூரியத் மாநாட்டு அமைப்பின் பேரணிக்கு தலைமை தாங்கிய மஸ்ரத் ஆலம் கூறுகையில் காஷ்மீர் மாநில மக்களின் விருப்பத்தைதான் நாங்கள் வெளிப்படுத்தினோம். அது தவறு என்றால் கைது செய்யலாம். சிறை செல்ல எங்களுக்கு பயம் இல்லை அது எங்களுக்கு பழகி விட்டது என்றார்.

மஸ்ரத் ஆலமின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்முவில் நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.அப்போது மஸ்ரத் ஆலம் படத்தை அவர்கள் எரித்தார்கள். இந்த நிலையில் ஹூரியத் பிரிவினை வாதத்தலைவர்கள் நேற்று ஶ்ரீநகரில் இருந்து புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதி நோக்கி  பேரணி நடத்த முடிவு செய்தனர்.டிரால் பகுதியில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து இந்த பேரணிக்கு பிரிவினை வாத தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மத்திய அரசு அதிரடி நடவடிக் கை மேற்கொண்டது. இதன்படி பிரிவினை வாதத்தலைவரான மஸ்ரத் ஆலம், ஹப்பக்கடல் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் ஷாகித் குஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 4ஆண்டுகளாக மஸ்ரத் ஆலம் சிறையில் அடைக்கப்ப ட்டிருந்தார்.அவரை கடந்த மாதம் தான் ஜம்மு காஷ்மீர் அரசு விடுதலை செய்திருந்தது. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அவரை விடுதலை செய்தது குறித்து சர்ச்சையும் எழுந்தது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் மோடி விளக்கம் அளித்தார்.

மஸ்ரத் ஆலம் காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பார் என்கிற கருத்தை பலரும் எச்சரித்து இருந்தனர். அதனை உறுதிபடுத்துவது போல ஶ்ரீநகரில்15ம் தேதியன்று பேரணி நடத்தி பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை அவரது ஆதரவாளர்கள் எடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவைத்தொடர்ந்து மஸ்ரத் ஆலமை ஜம்மு காஷ்மீர் அரசு கைது செய்துள்ளது.

அவரது கைது பற்றி காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்கம் காவல் நிலையத்தில் பதிவான வழக்குகள் அடிப்படையில்மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றார். கைது செய்யப்பட்டுள்ள மஸ்ரத் ஆலம் கூறுகையில், 1947ம்ஆண்டில் இருந்தே காஷ்மீரில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து