முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுட்டுக் கொல்லப்பட்ட உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 5தமிழர்களின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என ஆந்திர ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஆந்திராவில் உள்ளசேஷாசலம் வனப்பகுதியில்  செம்மரம் கடத்தப்படுவதாக ஆந்திர போலீசார் தமிழகத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 20பேர் கொல்லப்பட்டார்கள். இந்த துப்பாக்கிச்சூட்டில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ண மங்கலம் வேட்டகிரி பாளையத்தைச்சேர்ந்தமுனுசாமி,மூர்த்தி,மகேந்திரன்,முருகன்  சசிக்குமார்,பெருமாள் ஆகிய 6பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்யவில்லை.
சுட்டுகொல்லப்பட்ட அந்த தொழிலாளர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது உடலில் கைவிரல்கள்,கால்விரல்கள் பயங்கரமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களது உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனைத்தொடர்ந்து  6பேரின் உடல்களையும் திருவண்ணா மலை அரசு மருத்துவமனையில் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து சசிக்குமார் மனைவி முனியம்மாள் ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரணை செய்த ஆந்திர ஐகோர்ட் சசிக்குமார் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

சசிக்குமாரின் உடல் மட்டும் மீண்டும் பிரேதப்பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற 5பேரின் குடும்பத்தினர் ஐதராபாத் ஐகோர்ட்டில் நேற்றுமனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சுட்டுக்கொல்லப்பட்ட 5தமிழர்களின் உடல்களை மீண்டும் பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து