முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறையில் 300 சிறப்பு பேருந்துகள்: அரசு போக்குவரத்து கழகம் திட்டம்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

கோடை விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளுக்கு வரும் 22-ம் தேதியு டன் தேர்வுகள் முடிவடையவுள்ளன. இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும்.

இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களுக்கும், சுற்றுலா இடங் களுக்கும் மக்கள் செல்வார்கள். குறிப்பாக கடற்கரை பகுதிகள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, மக்களின் தேவைக்கு ஏற்றவாறு, சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

சிறப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக கோடை காலத்தில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டில் எவ்வளவு பேருந்துகளை இயக்குவது என்பது தொடர்பாகவும், எந்தெந்த சுற்றுலா மையங் கள் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு கூடுதலாக இயக்குவது என்பது தொடர்பாக ஓரிரு நாட்களில் போக்கு வரத்து கழக உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்கவுள்ளது.
அதில், சில முடிவுகளை எடுத்து அறிவிப்போம். குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மக்கள் அதிகமாக செல்வார்கள் என எதிர்பார்க் கிறோம். எனவே, குறைந்தபட்சமாக 250 முதல் 300 சிறப்பு பேருந்துகளை இயக்குவோம். நீண்ட தூரத்துக்கு பயணம் செய்யும் பயணிகள் போக்குவரத்துத் துறை இணைய தளத்தில் (http://www.tnstc.in/) முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து