Idhayam Matrimony

நீதிபதிகள் நேர்முக தேர்வுக்கு ஐகோர்ட் தடை

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சிவில் நீதிபதிகள் நேர்முகத் தேர்வுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ். கர்ணன் தடை விதித்துள்ளார்.

தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்து இருப்பதாக தலைமை நீதிபதி கவுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நீதித்துறையில் காலியாக உள்ள ஜூனியர் டிவிசன் சிவில் நீதிபதிகள் நியமனத்துக்கான எழுத்து தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

இந்த தேர்வு கமிட்டியில், ஐகோர்ட்டு நீதிபதிகள் வி. தனபாலன், ஹரிபரந்தாமன் , சுதாகர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நீதிபதி சி.எஸ். கர்ணன், அரசியல் அமைப்பு சட்டம் 226 ல் ஐகோர்ட்டு நீதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நேற்று  நடைபெறும் சிவில் நீதிபதிகள் நேர்முகத் தேர்வுக்கு தடை விதிப்பதாக கூறி, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி தனபாலன் தனது கல்வி தகுதி பற்றி பொய்யான தகவலை கொடுத்துள்ளார்.

அவர் சட்ட கல்வி படித்த சமயத்தில் டெலிகிராப்பிஸ்டாக வேலை பார்த்து வந்துள்ளார். நீதிபதிகள் ஆர். சுதாகர், டி. ஹரிபரந்தாமன் ஆகியோர் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். உறவினர்களும் கூட. இவர்களை கொண்டு சிவில் நீதிபதிகள் நேர்முகத்தேர்வை நடத்தினால் நேர்மையாக இருக்காது.  இதனால் , பொதுமக்கள் நீதித்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள் .
அதனால் இன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு தடை விதித்து டிஎன்பிஎஸ்சி தலைவருக்கு உத்தரவிடுகிறேன். தேர்வுக்குழுவில் சிறும்பான்மையைச் சேர்ந்த நீதிபதி இடம் பெறவில்லை. தேர்வுக்கு தான் தடை விதிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இவ்வாறு தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நீதிபதி சி.எஸ். கர்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து