முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் தமிழ் பெண் நீதிபதியாக நியமனம்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஏப்.18-
அமெரிக்காவில் நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தனது 16 வயதில் அமெரிக்காவுக்கு சென்றார். நியூயார்க் நகர நீதிபதியாக இந்திய பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. ராஜராஜேஸ்வரி இதற்கு முன்பு ரிச்மோண்ட் கவுண்டி மாவட்டத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டு பணி புரிந்தார்.

அவரை நியூயார்க் நகர மேயர் பில்டி பால்சியோ, நியாயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளார். இது தொடர்பார ராஜராஜேஸ்வரி கூறியது,
எனக்கு இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதை கணவு போன்று உணர்கிறேன். இதுநான் கற்பனை செய்ததற்கும் மேலானது. ஏனெனில் நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெண். எனக்கு இங்கு உயரிய பதவி கிடைத்துள்ளது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு நீதித்துறையின் மேம்பாட்டுக்கு உதவுவேன் என்றார்.

தெற்காசிய மற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களின் குழந்தைகள் உரிமை, குடும்ப வன்முறை வழக்குகளில் ராஜராஜேஸ்வரி திறமையாக செயசல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தந்துள்ளார். மேலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு ஆண்கள் அமெரிக்காவில் நீதிபதிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து