முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன் பிடித்தடைகால நிவாரணம் ரூ 2 ஆயிரம் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

1.65 லட்சம் மீனவர் குடும்பங்களுக்கு, மின்பிடி தடை கால நிவாரணம் வழங்க  ரூ.33.44 கோடியை நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்.

இது குறித்து  மீன்வளம்-பால்வளத் துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் பிறப்பித்துள்ள  உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

 மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும்   ஏப்ரல் 15 முதல் மே 29 வரை கிழக்கு கடலோரப் பகுதிகளில் விசைப் படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடிப்பற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது., இந்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. இந்த தடைக்காலத்தால் மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு  தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதி வழங்கப்படும்.

இந்த ஆண்டு 13 கடலோர மாவட்டங்களில் உள்ள சுமார் 1 லட்சத்து 65 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட இருக்கிறது. . இந்த நிவாரணத்துக்காக ரூ.33 கோடியே 44 லட்சம் நிதியானது விடுவிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து