முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மியின் நோட்டீஸ் ஒரு நகைச்சுவை: யோகேந்திர யாதவ்

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தனக்கு வழங்கப்பட்டு உள்ள நோட்டீசை ஒரு நகைச்சுவை என பேஸ்புக்கில் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். 


மேலும், தனக்கு நோட்டீஸ் வழங்கப்படுவதற்கு முன்னதாகவே ஊடகங்கள் கைக்கு அது எவ்வாறு கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியின் ஒழுங்கு குழு உறுப்பினர்கள் செய்தியை கசிய விட்டுள்ளனர் என்றும் யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் தேசிய குழு அதன் தலைவர் தினேஷ் வகேலா டெல்லியில் இல்லாதபோது நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை கட்சி எப்படி எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து