முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு வாருங்கள் அமைச்சர் பி.தங்கமணி அழைப்பு

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ‘‘தமிழ்நாட்டில் பெருமளவுக்கு முதலீடு செய்ய வாருங்கள்’’ என்று குஜராத் மாநில தொழிலதிபர்களுக்கு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்  பி.தங்கமணி அழைப்பு விடுத்தார்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் அடுத்த மாதம் (மே) 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவும், மாநிலத்தில் பெருமளவுக்கு முதலீடு செய்யவும் வலியுறுத்தி குஜராத் மாநில தொழிலதிபர்களை சந்தித்து தொழில் துறை அமைச்சர்  பி.தங்கமணி, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை  பிரதம செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர்  மற்றும் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன், டைம்லர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஹாம்பர்க், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் ஆகியோர் குஜராத் தொழிலதிபர்களுடனான சந்திப்பில் பங்கேற்றனர்.

‘மேற்கு நாடுகளுக்கு வர்த்தகத்தின் நுழைவு வாயில் குஜராத் மாநிலம் என்றால்– கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா– ஆகிய பசிபிக் நாடுகளுக்கு இன்றைய தேதியில் நுழைவாயிலாக இருப்பது தமிழ்நாடு என்று உணரப்பட்டு வருகிறது. மாநிலத்தில் ஆட்டோ மொபைல் பிரிவின் ஏற்றுமதி பிரிவும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவுக்கு இடையில் நாளுக்கு நாள் வர்த்தகம் அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாட்டின் தொழில் துறை மற்றும் வர்த்தகரீதியிலான வளர்ச்சியில் குஜராத் மாநிலத்தின் பங்களிப்பு, உலகளாவின வர்த்தக சமூகத்துடன் நம்முடைய ஆற்றல்மிகு உறவுகள் இன்னும் வலுப்படும். ஆக்கபூர்வமான இந்தியாவின் உலகமயமாக்கல் என்னும் மகத்தான திட்டத்தில் தமிழ்நாடு– மாநிலமும், குஜராத் மாநிலமும் பிரதம ஏஜெண்டுகளாக இருக்கிறோம்’’ என்று அமைச்சர் பி.தங்கமணி உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

‘‘தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் தமிழ்நாட்டை கொண்டு வந்து நிறுத்த மாநிலத்தில் செய்யப்பட்டு வரும் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் அரசின் கொள்கைகளை விளக்கமாக எடுத்துரைத்தார் ஹன்ஸ்ராஜ் வர்மா.

‘சர்வதேச தரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் 2 சக்கர வாகன உற்பத்தித்துறை நிலையாகவும், துரிதமாகவும் நவீனமயமாகிக் கொண்டு வருகிறது என்றார் வேணு சீனிவாசன்.
‘ஆட்டோ மொபைல் தொழில் துறையில் தமிழ்நாடும் குஜராத்தும் இணைந்தால் பிரகாசமான வாய்ப்பு’ என்று பெலிக்ஸ் ஹாம்பர்க் கூறினார்.

‘அபார வெற்றி பெற்ற வர்த்தக சமூகத்தினர் குஜராத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கணிசமான அளவுக்கு குஜராத் மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாது. இரு மாநிலங்களுக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டியும் உள்ளது. ஆகவே குஜராத் தொழிலதிபர்கள் தமிழ்நாட்டில் பெருமளவுக்கு முதலீட்டுக்கு முன்வர வேண்டும்’ என்று சி.வி.சங்கர் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து