முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் போட்டா போட்டி போட்டு மனுக்களை குவித்தனர்

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் போட்டா போட்டி போட்டு மனுக்களை குவித்தனர்
சென்னை, ஜெயலலிதா ஆணைப்படி அண்ணா தி.மு.க. 12வது கட்ட அமைப்பு தேர்தல்  25 மாவட்டங்களில்  நேற்று தொடங்கியது. இதில் சென்னை உள்ளிட்ட மாவட்டசஎல்லா இடங்களிலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தன. ஒவ்வொரு பொறுப்புக்கும் ஏராளமான பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மக்களின் முதல்வரும் அ. தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவுப்படி அ. தி.மு.க. அமைப்பு தேர்தல்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.மொத்தம் 14 கட்டமாக அ. தி.மு.க. அமைப்பு தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதில் இதுவரை 11 கட்டதேர்தல் முடிந்துள்ளது.11வது கட்டமாக கடந்த 3 நாட்களாக 25 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.இந்த  நிலையில் 12வது கட்டமாக நேற்று  முதல் 3 நாட்களுக்கு 25 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
அதாவது மாவட்ட கழக செயலாளர், இணை செயலாளர் (பெண்) 2 துணை செயலாளர் பதவிகள்,  பொருளாளர், அவைத்தலைவர், 3 பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது.

தென்சென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு என 4 மாவட்டங்கள் உள்ளன.4 மாவட்டங்களுக்கும் 4 இடங்களில் தேர்தல் நடந்தது..தென்சென்னை வடக்கு மாவட்ட கழக தேர்தல் தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாவட்டத்துக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், வக்ப் வாரிய தலைவருமான அ. தமிழ்மகன் உசேனை தேர்தல் பொறுப்பாளராக ஜெயலலிதா நியமித்திருந்தார். ஆணையாளர்களாக நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கே. தமிழரசன், ஆர். சாமி, எம்.வி. கருப்பையா மற்றும் க. தவசி, எஸ்.எம். சீனிவேல் ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்..தற்போது மாவட்ட கழக செயலாளராக இருக்கும் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ., மீண்டும் மாவட்ட செயலாளர் பதவிக்கு  மனு கொடுத்துள்ளார்.இதேபோன்று மாவட்ட செயலாளர் பதவிக்கு ஏ.ஏ.அர்ஜுனன், ஜி. ரவிக்குமார், டி.சிவராஜ் உட்பட பலர் மனு கொடுத்தனர்.

மாவட்ட பொருளாளர் பதவிக்கு தற்போது மாவட்ட பொருளாளராக இருக்கும் டி. தசரதன் மனு கொடுத்தார்.மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு தற்போது மாவட்ட அவைத்தலைவராக இருக்கும் கோதண்டராமர் மனு கொடுத்தார்.

மாமன்ற உறுப்பினர் வீடியோ சரவணன், மாவட்ட துணை செயலாளர், பொருளாளர், தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கும் மனு கொடுத்திருக்கிறார். மாவட்ட இணை செயலாளராக இருக்கும் யு. கற்பகம் எம்.சி. மீண்டும் அந்த பதவிக்கு மனு கொடுத்திருக்கிறார்.புஷ்பா நகர் ஆறுமுகம் எம்.சி, வீரைகறீம்  ஆகியோர் மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு மனு கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து ஏராளமான பேர் ஒவ்வொரு பதவிக்கும் பணம் செலுத்தி மனு கொடுத்தனர்..

வடசென்னை தெற்குவடசென்னை தெற்கு மாவட்ட கழக தேர்தல் எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளராக டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையனை ஜெயலலிதா நியமித்திருந்தார். தேர்தல் ஆணையாளர்களாக டாக்டர் கே.கோபால் எம்.பி., திருவாரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.எம். முகமது அஷ்ரப், மாவட்ட பேரவை செயலாளர் பொன். வாசுகிராம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெ. விஜயராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பதவிற்கு நா. பாலகங்கா மனு தாக்கல் செய்தார்.அப்போது பகுதிசெயலாளர்கள் ராமஜெயம், இருசப்பன், மற்றும் கவுன்சிலர்கள் இம்தியாஸ்  உள்ளிட்டோர்ஏராளமான தொண்டர்களும், மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர் மாவட்ட செயலாளர் பதவிக்கு வ.நீலகண்டன் எம்.எல்.ஏ., புரசை கிருஷ்ணன் உட்பட பலர் மனு கொடுத்திருந்தனர் இணைச்செயலாளர் பதவிக்கு குமாரி நாராயணனும், வேளாங்கண்ணி என்கிற கஸ்தூரியும் மனுக்களை அளித்திருந்தனர் மற்றும்  இதே போல தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு விருகை ரவியும், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி உள்ளிட்ட ஏராளமானவர்கள் மனு அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து