முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பங்கேற்கும் விவசாயிகள் பேரணி

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

டெல்லியில் இன்று ராகுல் காந்தி பங்கேற்கும் விவசாயிகள் பேரணி நடைபெறுகிறது. இதில் சுமார் 2 லட்சம் விவசாயிகள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவி ஓராண்டை எட்டப்போகும் நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னமும் புத்துணர்ச்சி நடவடிக்கைகளை தொடங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டதால் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.


காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சிலரது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த ராகுல், அவர்களை நீக்கி விட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டார். ஆனால் அவரால் மூத்த தலைவர்களை ஓரம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராகுல் கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஓய்வு எடுத்த அவர் 56 நாட்களுக்கு பிறகு டெல்லி திரும்பினார். காங்கிரசை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் செயல்பட அவர் திட்டமிட்டுள்ளார். எனவே விரைவில் காங்கிரஸ் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் ராகுலின் மறுஅரசியல் பிரவேசத்தை நாடே திரும்பி பார்க்கும் வகையில் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு டெல்லியில் இன்று அவர்கள் பிரம்மாண்ட விவசாயிகள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வட மாநிலங்களில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு நஷ்ட ஈடு கோரி வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் ராகுல் சிறப்புரையாற்றவுள்ளார். அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுத்து விட்டு திரும்பியிருக்கும் ராகுல் முதன் முறையாக இன்று நடைபெறவுள்ள விவசாயிகள் பேரணியில் தோன்றவுள்ளார்.

இதனால் இந்த பேரணியை பிரம்மாண்டமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேரணி நடைபெறும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குறைந்தபட்சம் 2 லட்சம் விவசாயிகளையாவது திரட்டி விட வேண்டும் என்பது காங்கிரஸ் மூத்த தலைவர்களின் இலக்காக உள்ளது. இதற்காக பல்வேறு மாநில தலைவர்களிடமும் டெல்லிக்கு விவசாயிகளை அழைத்து வரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டும் சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் இன்றைய பேரணிக்கு டெல்லி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு விவசாயிகளை இலவசமாக அழைத்து செல்ல கிசான் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை இயக்க உள்ளனர்.

17 பெட்டிகளுடன் செல்லும் அந்த ரயிலை 6 ஊர்களில் நிறுத்தி விவசாயிகளை ஏற்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளை வரவேற்க குழுக்கள் மற்றும் ராம்லீலா மைதானத்தில் குளிர்பான மையங்கள், ராகுல் பேசுவதற்கான பிரம்மாண்ட மேடை, ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்க 14 இடங்களில் மெகா திரை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து