முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது கழிப்பறையின் செப்டிக் டேங்க் வெடித்து சிதறியதில் 2 பேர் பலி

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

 ஆக்ரா நகரில் பேருந்து நிலையத்தில் இருந்த பொது கழிப்பறையின் செப்டிக் டேங்க் வெடித்து சிதறியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் ரகப்கஞ்ச் பகுதியில் ஈத்கா பேருந்து நிலையம் அருகே ஒரு பொது கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையில் இருந்து வெளியாகும் அசுத்த நீர் கழிப்பறையின் அடியில் உள்ள செப்டிக் டேங்கில் தேக்கி வைக்கப்பட்டு, அந்த தொட்டி நிரம்பிய பிறகு லாரிகள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால், நெடுநாட்களாக இந்த அசுத்த நீர் வெளியேற்றப்படாமல் இருந்துள்ளது.


இந்நிலையில், நேற்று அந்த செப்டிக் டேங்குக்குள் அதிகப்படியான விஷவாயுவின் அழுத்தம் ஏற்பட்டு, அந்த தொட்டி வெடித்து சிதறியது.அப்போது, அந்த கழிப்பறையில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அமர்ந்திருந்த பலர் மலநீரில் தவறி விழுந்தனர். இதில் விஷவாயு தாக்கி இருவர் பரிதாபமாக பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாரும், ஆக்ரா நகராட்சி அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து