முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியஅமைச்சர் கட்காரி சகோதரி வீட்டில் ரூ20லட்சம் நகை,பணம் கொள்ளை

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான நிதின் கட்காரி சகோதரி வீட்டில் இருந்து ரூ20லட்சம் நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். நிதின் கட்காரியின் சகோதரி வீடு மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் உள்ளது. நேற்றுமுன்தினம் ஜார்கண்ட்டில் இருந்து நாக்பூர் திரும்பிய தனது கணவரை வரவேற்பதற்காக கட்காரி சகோதரி தனது மகனுடன் விமான நிலையத்திற்கு சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்ட கொள்ளையர்கள்  வீட்டை உடைத்து  ரூ20லட்சம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த கட்காரியின் சகோதரி தங்களதுவீடு உடைக்கப்பட்டிருப்பதையும்  பொருட்கள் வீடு முழுவதும் சிதறிக்கிடப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கட்காரியின் சகோதரியின் கணவர் கோஷர் டோடலே கூறுகையில்,நாங்கள் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டிருந்தது.பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. இந்த கொள்ளை சம்பவம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது என்றார்.


இந்த கொள்ளை குறித்து நாக்பூர்இன்ஸ்பெக்டர் சசிகாந்த் டோன்கேல கூறுகையில் கட்காரி சகோதரி வீட்டில் 81கிலோ தங்கம் 2கிலோ வெள்ளி மற்றும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்றார்.
மத்திய அமைச்சரின் சகோதரி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் நாக்பூரில் சட்ட ஒழுங்கு முறையாக உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


மகாராஷ்டிராவின் முதல்வராக உள்ள தேவேந்திர பட்னாவிஸ்  சொந்த ஊர் நாக்பூர் ஆகும். மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை இலாகாவும் பட்னாவிஸ் கை வசமே உள்ளது. நாக்பூரில் தற்போது பாலியல் பலாத்கார சம்பவங்களும் கொள்ளைகளும் அதிகரித்துள்ளன. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாக்பூர் காவல் துறை ஆணையரை மாநில அரசு இடம் மாற்றம் செய்தது.அவருக்கு பதிலாக நாக்பூர் காவல்துறை ஆணையராக எஸ்.பி.யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாக்பூரில் முந்தய பணி காலத்தில்  கொள்ளையர்களையும் மாபியாக்களையும் ஒடுக்கினார்.இதனைத்தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் அந்த  நகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.


கட்காரி சகோதரி வீட்டில் கொள்ளை நடந்த நிகழ்வு துரதிர்ஷ்ட வசமானது. முந்தைய அரசின் அவலங்களால்இதுபோன்று நடந்து இருக்கிறது என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து