முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மை உதவி அதிகாரி பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, வேளாண்மை உதவி அதிகாரி பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று காலை தொடங்கியது. சென்னை வண்ணாரப்பேட்டை பிஏ.கே பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பாலசுப்பிரமணியன் திடீரென ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வேளாண்மை அதிகாரி பணியிடத்தில் காலியாக உள்ள 417 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி அறிவித்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 27ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 4 ஆயிரத்து 378 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் இன்று நடந்தது. சென்னையில் ராயபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய 2 இடங்களில் தேர்வு நடந்தது. ராயபுரம் .பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது. தேர்வை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர். தேர்வு நடத்த மையங்களில் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.தேர்வு முடிவுகளை 3 மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து