முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.கம்யூ. கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி ஒருமனதாக தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சீத்தாராம் யெச்சூரி

இ.கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி நேற்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பிரகாஷ் காரத் முன்மொழிந்தார். 

மாநிலங்களவை உறுப்பினரான யெச்சூரி, இ. கம்யூனிஸ்ட் கட்சியின் 5வது பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இ. கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்தியக் குழுவில் 91 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அத்துடன், 5 சிறப்பு அழைப்பாளர்களும், 5 நிரந்தர அழைப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.  மூத்த தலைவர்களான வி.எஸ். அச்சுதானந்தன், புத்ததேப் பட்டாச்சார்யா மற்றும் நிரூபம் சென் ஆகியோர் மத்தியக் குழுவில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

புதிதாத தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறும்போது,
கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க கூடியதாகவும், இந்தியா மற்றும் இடதுசாரிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றக் கூடியதாகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது மாநாடு இருக்கும். இந்த மாநாட்டின் மூலம் எதிர்கால வெற்றிக்கு வித்திடப்படும்.
மதவாதம், தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையே மோடி அரசு கொண்டிருக்கிறது. இந்த மும்மூர்த்திகளும் இந்திய மக்களுக்கு உகந்த திரிசூலமாக இருக்காது என்றார்.

கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியின் பெயரை ஓய்வு பெற்ற பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் முன்மொழிந்தார். எஸ்.ஆர். பிள்ளை வழிமொழிந்தார். இவருக்கு முன்பு பொதுச் செயலாளர் பதவியில் இருந்த பிரகாஷ் காரத் 3 முறை பதவி வகித்த பிறகு தற்போது பதவி விலகி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து